பிரபல அரசியல் கட்சியில் இணைந்த ரஜினியின் நெருங்கிய நண்பர்!

  • IndiaGlitz, [Tuesday,March 26 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர் கட்சி தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்து வரும் மக்களவை தேர்தலிலும் களம் காணுகிறார்.

இந்த நிலையில் அவருடைய இன்னொரு நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான மோகன்பாபு இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று அவர் அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து தன்னை அவருடைய கட்சியில் இணைத்து கொண்டார்.

இருப்பினும் ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் காலக்கெடு முடிந்துவிட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

6 வயது சிறுமி காயங்களுடன் பிணமாக மீட்பு: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் சற்றுமுன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த பிரபல நடிகரின் கட்சி

பிரபல நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

டிவி புகழ் டிடிக்கு கிடைத்த 'ரொமாண்டிக்' புரமோஷன்!

தொலைக்காட்சிகளில் பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி ஏற்கனவே 'பவர்பாண்டி', 'சர்வம் தாளமயம்' 'துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் சிறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் நாயகியாக புரமோஷன் ஆகியுள்ளார். 

அமமுகவுக்கு குக்கர் சின்னம் உண்டா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டிடிவி தினகரன் தனது அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

திருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கொடுத்த 185 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வந்தது.