பதக்கம் வென்றால் இந்தியர், இல்லையென்றால் சிங்கியா? நடிகர் மனைவியின் சர்ச்சை கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பதக்கம் வென்றால் மட்டும் எங்களை இந்தியர் என்று அழைப்பார்கள், மற்ற நேரங்களில் சிங்கி உள்பட பல பெயர்களில் எங்களை இழிவாக அழைக்கின்றார்கள் என பிரபல நடிகர் ஒருவரின் மனைவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனை அடுத்து அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
இந்த நிலையில் பிரபல நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பதக்கம் வென்றால் மட்டுமே வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இந்தியர்கள் என்றும் மற்ற நேரங்களில் சிங்கி உள்பட பல பெயர்களில் அழைத்து வருகிறார்கள் என்று அவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நீங்கள் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரென்றால், நாட்டுக்காகப் பதக்கம் வென்றால் மட்டுமே நீங்கள் இந்தியராக முடியும். இல்லையென்றால் நம்மை ‘சிங்கி’, ‘சைனீஸ்’, ‘நேபாளி’ என்றும் சமீபத்திய பெயரான ‘கரோனா’ என்றும் அழைப்பார்கள். இந்தியா சாதி வெறியில் மட்டும் மூழ்கியிருக்கவில்லை. மாறாக இனவெறியிலும் மூழ்கியுள்ளது. என்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன்.
அங்கிதாவின் இந்த பதிவுவுக்கு ஒரு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments