26 வயது பெண்ணை மணந்த பின் டான்ஸ் ஆடிய நடிகர்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் மிலிந்த் சோமன். இவர் பிரெஞ்ச் நடிகை ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரை 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் 52 வயது மிலிந்த் சோமன், கடந்த சில மாதங்களாக 26 வயது விமான பணிப்பெண் அங்கிதாவை காதலித்து வந்தார். சென்னையில் இரவு பார்ட்டி ஒன்றில் அங்கிதாவை சந்தித்த மிலிந்த், பின்னர் அவருடன் நட்பாகி பின்னர் காதலித்தார். இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த திருமணம் நேற்று உற்றார் உறவினர்கள் சூழ நடைபெற்றது.

திருமணத்திற்கு முந்தைய நாளான மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் அங்கிதாவுடன் மிலிந்த் சோமன் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.