'நான் அக்காகிட்ட சொல்லியிருக்கேன், எல்லாமே அவ பாத்துக்கிடுவா'; மயில்சாமியின் கடைசி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான மயில்சாமி இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென காலமானது திரை உலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் அவரது மறைவு குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மயில்சாமியின் கடைசி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ’கிளாஸ்மேட்ஸ்’ என்ற படத்திற்காக அவர் டப்பிங் செய்த போது எடுத்த எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ‘மாப்பிள நான் சொல்றதை கேளு மாப்பிள்ளை, நான் அக்கா கிட்ட சொல்லி இருக்கேன், எல்லாமே அவ பார்த்துப்பா, இதை பாரு நீ யாருக்கும் மனசுல துரோகம் செய்யாமல் இருந்தா, நீ கரெக்டா இருந்தா, நீ வெற்றி பெறுவாய் , நான் சொல்றதை கேளுடா நீ, ஏன் மத்தவங்க சொல்றதை கேட்கிறாய்’ என்று அவர் டப்பிங் செய்துள்ளார்.
நடிகர் மயில்சாமி கடைசியாக டப்பிங் செய்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Versatile Actor #Mayilsamy ( @mayilsamyR ) Finish his Dubbing for #Glassmate Movie
— D Next (@dnextoff) February 18, 2023
RELEASING SOON🌊 @angaiyarkannan1@Rajsethupathy1 @actressbrana @santhoshchoreo @dnextoff @teamaimpr pic.twitter.com/WgSvAN5bm3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments