சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் காமெடி நடிகர்: நாளை வேட்புமனு தாக்கல்!

  • IndiaGlitz, [Sunday,March 14 2021]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்துக் கொள்கிறோம். இன்று கூட பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பூ அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாகவும் நாளை மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் நாளை மனு தாக்கல் செய்துவிட்டு காலை 11:20 மணிக்கு தனது இல்லத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார் என்பதும் அதன் பின்னர் கட்சியில் இருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் சரி, கொரோனா ஊரடங்கின்போதும் சரி தனது பகுதி மக்களுக்கு உணவு உள்பட பல்வேறு உதவிகளை செய்துள்ளதால் அந்த தொகுதியில் அவர் செல்வாக்கு உடையவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வீடுதேடி வரும் ரேசன், அரசு கேபிள் இலவசம்: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அதிமுக தேர்தல் அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 'அந்நியன்' பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் அதில் நடிகை குஷ்பூ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

குஷ்பு போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: கமலுக்கு எதிராக போட்டியிடுபவர் யார்?

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார்

படைப்புகளிலும் வாழ்க்கையிலும் பேசியவர்: ஜனநாதன் மறைவு குறித்து பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் ஜனநாதன் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இயக்குனர் ஜனநாதன் மறைவு குறித்து

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ஆஸ்கார் நாயகன்: வைரல் புகைப்படம்!

ஆஸ்கார் விருதை வாங்கிய திரைப்பட கலைஞர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது