'கைதி' படத்தில் நடிக்க இருந்த நேரத்தில் உண்மையிலேயே 'கைதி' ஆனேன்: 'லியோ' நடிகர்..

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் நான் உண்மையிலேயே கைது செய்யப்பட்டு கைதியானதால் அந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தன்னை தொடர்பு கொண்டு தன்னுடைய பேனரில் ஒரு மிகப்பெரிய ரோல் உங்களுக்கு இருக்கிறது என்றும் அது மிகப்பெரிய படம் என்றும் கூறியிருந்தார். அந்த படம் தான் ‘கைதி’ திரைப்படம்.

‘கைதி’ படத்தில் நடிக்க நான் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் தான் திடீரென நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அதனால் அந்த படத்தை நான் மிஸ் செய்தேன். லோகேஷ் கனகராஜ் பின்னாளில் அளித்த பேட்டியில் ‘கைதி’ திரைப்படத்தின் அந்த கேரக்டர் எனக்காகவே எழுதப்பட்டது என்று கூறியிருந்ததை நினைத்து நான் பெருமைப்பட்டேன். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் பெறும் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கைதி’ திரைப்படத்தை மிஸ் செய்தாலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.