close
Choose your channels

'லியோ' ஆடியோ லான்ச் நிலாவுல நடக்கும்.. ரஜினியை நினைச்சா கேவலமா இருக்குது: மன்சூர் அலிகான் பேட்டி..!

Sunday, August 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லியோ’ படத்தின் ஆடியோ லான்ச் நிலாவில் சந்திராயன் அருகில் நடக்கும் என்றும் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது கேவலமாக இருக்கிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’லியோ’ படத்தின் ஆடியோ லான்ச் மதுரையிலா? அல்லது சென்னையிலா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது ’நிலாவில் நடக்கும், சந்திராயன் அருகில் நடக்கும்’ என்று காமெடியாக கூறினார்.

ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் முதல்வர் காலில் விழுந்ததை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது ’மிகவும் கேவலமாக இருக்கிறது, தமிழ்நாட்டின் மானமே போய்விட்டது, ’ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் ’ஜெயிலர்’ படம் சுத்தமாக ஓடி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உங்கள் பிறந்த நாளன்று ’லியோ’ படத்தின் உங்கள் கேரக்டர் ஸ்டில்ஸ் வருமா? என்று கேட்டதற்கு ’நான் பிறந்த நாளே கொண்டாடுவதில்லை’ என்று தெரிவித்தார். மேலும் சில கேள்விகளுக்கு அவர் காமெடியாக பதில் அளித்தார் என்பதும் இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment