சிறை செல்வது எங்களுக்கு கோவிலுக்கு செல்வது போல்: மன்சூர் அலிகான்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'நாம் தமிழர் கட்சியினர்களுக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போல் ' என்று கூறியுள்ளார்
சமீபத்தில் பாரத பிரதமர் சென்னைக்கு வந்தபோது சீமானின் 'நாம் தமிழர் கட்சியினர் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டினர். இதனால் சீமான் உள்பட ஏராளமான நாம் தமிழர் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சீமானை வேறொரு வழக்கில் கைது செய்யப்போவதாக செய்திகள் பரவியதால் சீமான் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபம் முன் நாம் தமிழர் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டநிலை உருவாகியது.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், சீமானை கைது செய்தால் தன்னையும் கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் சீமானை போலீசார் கைது செய்யவில்லை
ஆனால் மறுநாள் திடீரென மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்த மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''நாம்தமிழர் கட்சியினருக்கு சிறைக்கு செல்வது கோவிலுக்கு செல்வதுபோல் என்று கூறினார். மேலும் அறவழிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நான் ஏன் திருத்தணியில் கையெழுத்திட வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com