திடீரென தேசிய கட்சியில் இணையும் மன்சூர் அலிகான்.. தாய் கழகத்தில் இணைவதாக அறிவிப்பு..
- IndiaGlitz, [Thursday,April 25 2024]
நடிகர் அன்சூர் அலிகான் ஏற்கனவே இரண்டு அரசியல் கட்சியில் இருந்த நிலையில் அதன் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும், பின்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சுயேட்சையாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது திடீரென தேசிய கட்சியில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த 1999 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் திருச்சி தொகுதியில் தனித்து போட்டியிட்டார். இதனை அடுத்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். மேற்கண்ட 3 தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய அவர் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து வேலூர் தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தற்போது திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்ததாகவும் தற்போது மீண்டும் தாய் கழகத்தில் இணையவுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்த கடிதத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | "காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளேன்"
— Sun News (@sunnewstamil) April 25, 2024
- சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்த பிறகு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி#SunNews | #LokSabhaElections2024 | #PMModi | #MansoorAliKhan pic.twitter.com/uGlUvnQuJd