சீமான் கைதை தட்டிக்கேட்ட மன்சூர் அலிகான் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்பட பல தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டியதால் சீமான் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சீமானை வேறொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். மேலும் அங்கு நடிகர் மன்சூர அலிகானும் வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என்று அவர் போலீசாரிடம் கூறினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் உட்பட 18 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிற்காக இன்று அதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் உட்பட 18 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout