சீமான் கைதை தட்டிக்கேட்ட மன்சூர் அலிகான் கைது

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்பட பல தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டியதால் சீமான் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சீமானை வேறொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர். மேலும் அங்கு நடிகர் மன்சூர அலிகானும் வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என்று அவர் போலீசாரிடம் கூறினார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் உட்பட 18 பேர் மீது  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிற்காக இன்று அதிகாலையில் நடிகர் மன்சூர் அலிகான் உட்பட 18 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

More News

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிட' திரைப்படத்தில் மிகச்சிறப்பாக இசையமைத்ததற்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

மரணத்திற்கு பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த தேசிய விருது

பிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு பின் அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது: எந்த படத்திற்கு தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தான் அறிமுகமான முதல் படமான 'ரோஜா' படத்திற்கே தேசிய விருது வாங்கியவர். அதன் பின்னர் மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களுக்கும் தேசிய விருதினை பெற்றார்

நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது..

சிறுமி ஆசிஃபாவின் ஆன்மாவிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.