பலாப்பழம் இருட்டா இருக்கு, கருப்பா இருக்கு.. தேர்தல் அதிகாரிகளுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் வழங்கப்பட்ட நிலையில் தனது சின்னம் கருப்பாக இருப்பதாகவும் இருட்டாக இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் சில நாட்களிலேயே அவர் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் பலாப்பழ சின்னம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் மன்சூர் அலிகான் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்த போது தனது சின்னம் பலாப்பழம் கருப்பாக இருப்பதாகவும் இருட்டாக இருப்பதாகவும் மற்ற சின்னங்கள் எல்லாம் பளிச்சென்று நன்றாக தெரியும் நிலையில் தன்னுடைய சின்னம் மற்றும் சரியாக தெரியவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
அதுமட்டுமின்றி ஓட்டு போட வந்த அவர் வரிசையில் இருக்கும் வாக்காளர்களை கண்டு கொள்ளாமல் நேராக உள்ளே சென்று வாக்கு செலுத்தியது மட்டுமின்றி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#MansoorAliKhan straight from hospital to cast his vote 🗳️ 🫡 pic.twitter.com/WNEbWvCJTU
— Cinema Calendar (@CinemaCalendar) April 19, 2024
பாலப்பழம் சின்னம் ஏன் இருட்டா இருக்கு? வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்#MansoorAliKhanpic.twitter.com/icvVcfClC1
— Tamil Diary (@TamildiaryIn) April 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com