முன் ஜாமீன் கோரி மனு செய்த மன்சூர் அலிகான்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா வைரஸ் பரவல் கொடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூரலிகான் திடீரென முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். கொரோனா வைரஸ் என்பதே இல்லை என்றும் தடுப்பூசி தேவையில்லை என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் சமீபத்தில் சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது எப்போது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று தான் சொல்லவில்லை என்றும் அந்த மனுவில் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments