ஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது சமூக வலைத்தளத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ஒரு விரலை தூக்கி எஸ்பி பாலசுப்ரமணியம் காண்பிப்பது போல் இருக்கும் இந்த புகைப்படம் அவர் நலமுடன் இருப்பதையே காண்பிப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மனோபாலா அவர்கள் ’அண்ணா வாங்க வாங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மனோபாலாவின் டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Anna..vanga vanga.. pic.twitter.com/8meLd4YsvX
— manobala (@manobalam) August 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com