நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு கௌரவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை கலைஞர் எனப்பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகர் மனோபாலாவிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முகை ஆளுமைகளோடு நீண்டகாலமாகச் சிறப்பான பணியை ஆற்றிவரும் நடிகர் மானோபாலாவிற்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கவுரவித்துள்ளது. அதேபோல பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியதற்காக பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் திரைத்துறைக்கு நடிகர் மனோபாலா ஆற்றிவிரும் சிறப்பான சேவையைப் பாராட்டி அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது“ஐ வழங்கி கவுரவித்து இருக்கிறது.
உயர்கல்வியில் பல்வேறு சாதனைகளோடு முக்கியப் பல்கலைக்கழகமாக திகழ்ந்துவரும் சவுத் வெஸ்டர்ன் அமெரிக்கப் பலைக்கழகம் நடிகர் மனோபாலாவிற்கும் பூச்சி முருகனுக்கும் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து இருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments