நடிகர் மம்முட்டி வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வு.. திரையுலகினர் ஆறுதல்..!

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

நடிகர் மம்முட்டி வீட்டில் நடந்த சோக நிகழ்வை அடுத்து அவருக்கும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு மற்றும் ஒருசில நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதையடுத்து இன்று மாலை அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மம்முட்டியின் தாயார் மறைவு அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில், தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மறைந்த பாத்திமா இஸ்மாயில் அவர்களுக்கு மம்முட்டி உட்பட மூன்று மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முக ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய் ட்விட்டர் கணக்குகளுக்கு திடீர் சிக்கல்.. தப்பித்த கமல், சூர்யா..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூடிக் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வாரம் ஒரு தமிழ்ப்படம் கூட ரிலீஸ் இல்லை.. ஓடிடி ரிலீஸ் விபரம்..!

 ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போலவே ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'லியோ' ஆடியோ விழாவில் ஒரு சர்ப்ரைஸ்.. விஜய்யின் மாஸ் திட்டம் இதுவா?

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினியை அடுத்து தமிழ் நடிகை வீட்டில் திருட்டு.. வேதனையுடன் செய்த ஆழமான பதிவு..!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு நடந்த நிலையில் தற்போது நடிகை ஒருவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன்

1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கிளைமாக்ஸ்.. அன்பறிவ் மாஸ்டர்களுடன் ஷங்கர் ஆலோசனை..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் கிளைமாக்ஸ் 1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கூடிய ஸ்டண்ட் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் ஸ்டண்ட் இயக்குனர்