நடிகர் மம்முட்டி வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வு.. திரையுலகினர் ஆறுதல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மம்முட்டி வீட்டில் நடந்த சோக நிகழ்வை அடுத்து அவருக்கும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு மற்றும் ஒருசில நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதையடுத்து இன்று மாலை அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மம்முட்டியின் தாயார் மறைவு அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில், தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
மறைந்த பாத்திமா இஸ்மாயில் அவர்களுக்கு மம்முட்டி உட்பட மூன்று மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout