ஒலிம்பிக் பதக்க வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மலையாள மெகா ஸ்டார் நடிகர்!

மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் மம்முட்டி இந்திய ஆண்கள் ஹாக்கி பிரிவில் இடம்பெற்ற கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு நேரில்சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி டீம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி டீமிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே மாநில மற்றும் மத்திய அரசு அவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்ஷின் வீட்டிற்கு நடிகர் மம்முட்டி நேரில்சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் 41 ஆண்டுகால இந்திய கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீஜேஷ், இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும்போது கூட நான் இவ்வளவு உணர்ச்சி வசப்படவில்லை. நடிகர் மம்முட்டி என்னைப் பார்க்க நேரில் வந்தது எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற ஸ்ரீஜேஷ் கோல்கீப்பராக இருந்து இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் உதவிபுரிந்துள்ளார். இதனால் கேரள மாநிலம் அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மேலும் கல்வித்துறையில் துணை இயக்குநராக பதவிவகித்து வரும் அவருக்கு இணை இயக்குநராக பதவி உயர்வும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மம்முட்டி ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷை நேரில் சந்தித்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த “மக்கள் அன்பன்“ பட்டம்… கொடுத்தது யார் தெரியுமா?

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உயதநிதி ஸ்டாலினுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதுப்படத்தின் படக்குழுவினர்

பழனி முருகனை வழிபட்ட நடிகர் சிவகார்த்திகேயன்... ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “டான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பழனி சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

உடலுறவின் போது படுக்கையில், ஆண் தன் துணையிடம் எதிர்பார்ப்பது என்ன.....?

பெண்கள் எப்படி ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல் தான் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள்.  ஆண்களை அதிகபட்ச ஆசைக்கு அழைத்து செல்வது  குறித்த டிப்ஸ்-களை இதில் பார்க்கலாம்.

விபச்சாரம் பண்ற நாய்ங்களா, முடிஞ்சா என்ன தொட்டுப்பாரு....! சூர்யா, சிக்காவிற்கு மிரட்டல் விட்ட பெண்....!

டிக்டாக் மற்றும் யுடியூபில் ஆபாசமாக பேசியே பிரபலமானவர்கள் ஏராளம். தனக்கு கெட்டபேர் வந்தாலும் சரி, யார் நம்மை பற்றி கேவலமாக கமெண்டுகளை பதிவிட்டாலும் சரி, பிரபலம் அடைவது தான் முக்கியம்

வயிறு எரியுது: விஜய்-தோனி புகைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் கமெண்ட்

தல தோனி இன்று தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய் மற்றும் படக்குழுவினர்களை சந்தித்தார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே