ஒலிம்பிக் பதக்க வீரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மலையாள மெகா ஸ்டார் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் மம்முட்டி இந்திய ஆண்கள் ஹாக்கி பிரிவில் இடம்பெற்ற கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு நேரில்சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி டீம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி டீமிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே மாநில மற்றும் மத்திய அரசு அவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்ஷின் வீட்டிற்கு நடிகர் மம்முட்டி நேரில்சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் 41 ஆண்டுகால இந்திய கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீஜேஷ், இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும்போது கூட நான் இவ்வளவு உணர்ச்சி வசப்படவில்லை. நடிகர் மம்முட்டி என்னைப் பார்க்க நேரில் வந்தது எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற ஸ்ரீஜேஷ் கோல்கீப்பராக இருந்து இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் உதவிபுரிந்துள்ளார். இதனால் கேரள மாநிலம் அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
மேலும் கல்வித்துறையில் துணை இயக்குநராக பதவிவகித்து வரும் அவருக்கு இணை இயக்குநராக பதவி உயர்வும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மம்முட்டி ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷை நேரில் சந்தித்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com