சுத்த தமிழில் வாழ்த்து கூறிய மலையாள சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஜல்லிக்கட்டுக்காக அலைகடலென இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் திரண்டு கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி மகேஷ்பாபு, பவண்கல்யாண் உள்பட பல தெலுங்கு நட்சத்திரங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி சுத்த தமிழில் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். அவர் வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி, ஆண்-பெண், ஜாதிமத பாகுபாடின்றி, லட்சக்கணக்கான பேர் துளியும் வன்முறை இல்லாமல் தமிழ்நாட்டில் போராடி கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த போராட்டம் இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தோழர்களே' என்று கூறியுள்ளார்.

More News

சூர்யாவின் 'சி3' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இளையதளபதி விஜய்

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக சென்னை மெரீனாவில் போராடி வருகின்றனர்...

'ஊக்கமது கைவிடேல்' ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு கமல் வாழ்த்து

உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே...

ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல். வாடிவாசல் திறப்பது எப்போது?

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது...

நடிகர் ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த நான்கு நாட்களாக மெரீனாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்களுக்காக ரூ.1 கோடி கூட செலவு செய்ய தயார் என்று நேற்று அறிவித்திருந்தார்...