close
Choose your channels

ஹாலிவுட் படத்திற்கு தயாராகிறாரா? மகேஷ்பாபுவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படம்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மகேஷ்பாபுவின் லேட்டஸ்ட் வொர்க் அவுட் போட்டோஷோட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபு கடந்த 80களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தார். அதன் பிறகு அவர் 2000ஆம் ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார் என்பதும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக தயாராகும் வகையில் அவர் உடல் எடையை குறைத்து பிட் ஆகி வருகிறார். அதற்காக அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஹாலிவுட் படத்திற்கு மகேஷ் பாபு தயாராகிறாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment