வெள்ளியை அடுத்து தங்கப்பதக்கம்: நடிகர் மாதவன் மகன் மீண்டும் சாதனை:
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் மாதவன் மகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்த நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்ற உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற இடத்தில் நடந்த தனிஷ்க் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்த நிலையில் தற்போது டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம் வென்று வேதாந்த் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, ‘இந்த சாதனை மகிழ்ச்சி அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இந்த சாதனை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, தங்கம் என அடுத்தடுத்து பதக்கங்கள் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்த நடிகர் மாதவன் மகன் வேதாந்ததை அரசியல் கட்சி பிரமுகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
And So TODAY the winning streak continues.. @VedaantMadhavan gets a GOLD at Denmark open.????❤️❤️Pradeep Sir @swimmingfedera1 #ANSAdxb & all of you for the continued blessings . ???????????? pic.twitter.com/UhNXMostqx
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments