அசர வைக்கும் நடிகர் மாதவனின் மகன்… பதக்கங்களை குவித்து சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதனால் நெட்டிசன்ஸ் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாழ்க்கையைத் துவங்கிய நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை கொடிகட்டி பறந்துவருகிறார். சாக்லேட் பாய் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தற்போது 50 வயதாகியும் பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். கூடவே இயக்குநர் ஆனந்த் மஹாதேவனுடன் இணைந்து “ராக்கெட் நம்பி வளைவு” எனும் படம் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய மகன் வேதாந்த் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான 47 ஆவது ஜுனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 4 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என 7 பதக்கங்களை வென்றுள்ளார். இவருடைய சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வேதாந்த், ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments