அசர வைக்கும் நடிகர் மாதவனின் மகன்… பதக்கங்களை குவித்து சாதனை!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதனால் நெட்டிசன்ஸ் அவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாழ்க்கையைத் துவங்கிய நடிகர் மாதவன் தற்போது தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை கொடிகட்டி பறந்துவருகிறார். சாக்லேட் பாய் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தற்போது 50 வயதாகியும் பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். கூடவே இயக்குநர் ஆனந்த் மஹாதேவனுடன் இணைந்து “ராக்கெட் நம்பி வளைவு” எனும் படம் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய மகன் வேதாந்த் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான 47 ஆவது ஜுனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 4 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என 7 பதக்கங்களை வென்றுள்ளார். இவருடைய சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வேதாந்த், ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.3 கோடி வரி பாக்கி… ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.3 கோடி வருமான வரி

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள்,

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடிகை சமந்தா இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து

'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

வேற லெவல் குத்துப்பாட்டை எழுதினாரா கமல்ஹாசன்? 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.