தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளி குவிக்கும் நடிகர் மாதவனின் மகன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஏற்கனவே நீச்சல் போட்டியில் பல பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் தற்போது மேலும் சில பதக்கங்களை வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பதும் இவர் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர் இயக்குனராகவும் இருந்து வருகிறார் என்பது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் உருவான ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஏற்கனவே இந்தியா சார்பில் பல சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டார். இதில் அவர் 400 மீட்டர் 800 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கங்களையும் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார். ஒரே போட்டியில் 3 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்ற மாதவனின் மகன் வேதாந்தக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதுமட்டுமின்றி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் வேதாந்த், இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் இதற்காக இவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் துபாயில் குடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.