close
Choose your channels

தங்க மெடல்களை வென்று குவித்த பிரபல நடிகரின் மகன்!

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்பதும் தேசிய அளவில் நடந்த போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வேதாந்த், மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார். அனைவரின் ஆசியாலும், வாழ்த்துக்களாலும் தனது மகன் இந்த சாதனையை செய்துள்ளதாகவும், இது தனக்கு பெருமை தரும் வகையில் இருப்பதாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகனின் அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு போட்டி என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாதவன் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராக்கெட்டரி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment