ஹேப்பி அனிவர்சரி பொண்டாட்டி: பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் பதிவு!
- IndiaGlitz, [Sunday,June 06 2021]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது திருமண நாளைக் கொண்டாடுவதை அடுத்து தனது மனைவிக்கு ’ஹாப்பி அனிவர்சரி பொண்டாட்டி’ என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் மாதவன். மணிரத்னம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் சாக்லேட் பாய் வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் ஒரு சில ஆக்ஷன் படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாதவன் தனது திருமண நாளைக் கொண்டாடி வருவதை அடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் இத்தனை ஆண்டுகளில் என்னை முழு பிரமிப்பு மற்றும் அன்புடன் வைத்திருந்த எனது பொண்டாட்டிக்கு ஹாப்பி அனிவர்சரி வாழ்த்துக்கள் என்றும், இன்னும் பல ஆண்டுகள் நாம் இதேபோல் இருப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ரசிகர்கள் மாதவன்-சரிதா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.