நடிகர் மாதவனின் குடும்பத்திற்கே கொரோனா: டுவிட்டரில் தகவல்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும், தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக விஷால், சரத்குமார், தமன்னா உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் குணமானார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவன் தனது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் மாதவனின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.