கைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க வேண்டும் என்றால் அதற்கென பயிற்சி பெற்றவரை வரவழைக்க வேண்டும். ஆனால் கைக்கு எட்டும் தூரத்தில் தேங்காய் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்
இப்படி ஒரு கற்பனையை தான் நடிகர் மாதவன் தனது தோட்டத்தில் உண்மையாகவே நனவாக்கி உள்ளார். நடிகர் மாதவன் தனக்கு சொந்தமான தரிசு நிலத்தில் உயரம் குறைந்த தென்னை மரங்கள் வளர்த்ததாகவும், அதில் தேங்காய்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும் புகைப்படத்துடன் ஒரு டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
இது ஒரு அருமையான திட்டம் என்றும் இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் மிக இனிப்பான சுவையான தேங்காய்களை விளைவிப்பதாகவும் இந்த உயரம் குறைந்த தேங்காய்களை தங்களுடைய தரிசு நிலத்தில் வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்த முழு விவரங்களுடன் கூடிய ஒரு கட்டுரை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த கட்டுரை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கும் என்றும் நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
தென்னை மர வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திய மாதவனுக்கு விவசாயிகள் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
It was a fantastic project in which we grew super sweet and aromatic non Hybrid but pure dwarf variety coconuts on almost barren land. Will be putting out an article and paper for all the local farmers soon. https://t.co/5XLiV7ShW1 pic.twitter.com/5uHoLTs29l
— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 20, 2020