நடிகர் மதன்பாப் மகள் ஒரு பிரபல பாடகியா? விஜய் படத்தில் கூட பாடியிருக்காரா?
- IndiaGlitz, [Thursday,April 20 2023]
காமெடி நடிகர் மதன்பாப் மகள் ஒரு பாடகி என்றும் அவர் விஜய் நடித்த படத்தில் கூட பாடல் பாடியிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கே பாலச்சந்தர் இயக்கிய ’வானமே எல்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மதன்பாப். அவரது வித்தியாசமான சிரிப்பு ரசிகர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறு சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் இவரது காமெடி வித்தியாசமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பாக ’அசத்தப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதன்பாப், சுசீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஜனனி என்ற மகளும் அர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மதன்பாப் மகள் ஜனனி ஒரு பிரபல பாடகி என்பது பலரும் அறியாத செய்தியாக உள்ளது.
தனுஷ் நடித்த ’படிக்காதவன்’ திரைப்படத்தில் இடைப்பட்ட ’ரோசு ரோசு ரோசு’ என்ற பாடலை ஜனனி தான் பாடியுள்ளார். மேலும் ’வீராப்பு’ படத்தில் ’போனா வருவீரா’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் விஜய் நடித்த ’சுறா’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நான் நடந்தால் சரவெடி ’என்ற பாடலையும் பாடியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தனக்கு பிடித்த மாதிரி பாடும் வாய்ப்பு இன்னும் வரவில்லை, நான் என்னுடைய வாய்ஸில் வேற மாதிரி பாடணும் என்று ஆசைப்படுகிறேன், ஆனால் எனக்கு வருவதெல்லாம் ஒரே மாதிரியான குரலில் பாடுவது தான் வருகிறது என்று ஜனனி கூறியிருக்கிறார். விரைவில் அவரது திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.