நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா? வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் குணசித்திர நடிகரான லிவிங்ஸ்டன் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு அழகான மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பாக்யராஜ் இயக்கி நடித்த ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லிவிங்ஸ்டன். அதன்பிறகு அவர் சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த ’சுந்தர புருஷன்’ ’சொல்லாமலே’ உள்ளிட்ட ஒருசில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு ஜெஸ்ஸி இருதயராஜ் என்பவரை லிவிங்ஸ்டன் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஜொவிதா, ஜெம்மா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் லிவிங்ஸ்டன் மகள்களில் ஒருவரான ஜொவிதா, சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜொவிதா தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரி மற்றும் அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா? என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com