விவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்கள் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
இன்று காலை மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமான நிலையில் அவரது நினைவலைகள் குறித்து திரையுலகினர் பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்றில் கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இலங்கையில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்றும் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டால் எனக்கு ஐம்பதாயிரம் கிடைக்கும் என்றும் அந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நான் விவேக்கை சந்தித்து கேட்டுக்கொண்டேன். அவர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.,
இதனை அடுத்து நாங்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். நிகழ்ச்சியும் சிறப்பாக முடிந்ததும் எனக்கு பேசியபடி ஐம்பதாயிரம் தொகையை நிர்வாக குழுவினர் கொடுத்தனர். அதன்பிறகு விவேக்கிற்கும் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கி அப்படியே அவர் என்னிடம் கொடுத்தார். இந்த இரண்டு லட்சத்தையும் உங்களுடைய பெண்ணின் கல்யாணத்திற்காக வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியபோது நான் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். நான் இதுவரை அழுததே கிடையாது, அது ஆனந்தக் கண்ணீர்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த பேட்டியை அவர் அளிக்கும் போது கூட கண்ணீர் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
விவேக் எனும் மனிதநேயமுள்ள ஆத்மா pic.twitter.com/mfqOJDoROu
— ச ப் பா ணி (@manipmp) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments