close
Choose your channels

மகளுக்காக கொட்டாச்சி கொடுத்த விலையுயர்ந்த பிறந்த நாள் பரிசு.. இத்தனை லட்சம் மதிப்பா?

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் கொட்டாச்சி தனது மகளுக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள ஒரு பிறந்தநாள் பரிசை வாங்கி கொடுத்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான கொட்டாச்சி திறமையாக காமெடி செய்த போதிலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்பது சோகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் கொட்டாட்சியின் மகள் மானஸ்வி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் என்பதும் குறிப்பாக நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரிய நடிகைகளுக்கே மகளாக அவர் நடித்து பெயரும் புகழும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கொட்டாச்சி மகள் மானஸ்வி பிறந்த நாளை முன்னிட்டு தனது மகளுக்காக கொட்டாச்சி கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார். தனது மகளுடன் வெளியே போகும் போதெல்லாம் நாமும் ஒரு கார் வாங்க வேண்டும் என்று மகள் மானஸ்வி ஆசைப்படுவார் என்றும் அந்த ஆசையை இன்று தான் நிறைவேற்றி வைத்துள்ளதாகவும் கொட்டாச்சி கூறியுள்ளார். அவர் வாங்கி கொடுத்த காரின் மதிப்பு ரூ.13 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மான்ஸ்வி கூறியபோது, ‘நான் எது கேட்டாலும் எங்கள் அப்பா அம்மா இல்லை என்று சொல்வதே இல்லை, இன்று நான் நினைத்த மாதிரியே என் அப்பா கார் வாங்கி கொடுத்துள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்னுடைய அப்பா அம்மா எல்லா ஜென்மத்திலும் எனக்கு அப்பா அம்மா வர வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment