வாடகை வீட்டில் கஷ்டப்படும் நடிகர் கிஷோர்

  • IndiaGlitz, [Tuesday,September 15 2015]

கோலிவுட் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர், நாயகனாக நடித்து வரும் படம் 'கடிகார மனிதர்கள்'. மூன்று குழந்தைகளுக்கு தகப்பனாக நடித்துள்ள கிஷோருக்கு ஜோடியாக லதாராவ் நடித்துள்ளார்.

சிறிய நகரங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிவரும் ஒரு குடும்பத்திற்கு அதுவும் மூன்று குழந்தைகளுடன் உள்ள குடும்பத்திற்கு வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும், அப்படியே கிடைத்தாலும் வீட்டு உரிமையாளர்களால் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் இந்த படம் தெளிவாக விளக்குவதாக கிஷோர் கூறியுள்ளார்.

அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் ஏராளமானோர் பெருநகரங்களை நோக்கி வேலை உள்பட பல்வேறு காரணங்களால் குடிவர உள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதம் குறித்தும் இந்த படத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர்களை இந்த படம் பெரிதும் கவரும் என தான் நம்புவதாகவும் கிஷோர் கூறியுள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதை மிகவும் அழுத்தமாக இருந்ததாகவும், அதைவிட இந்த படத்தின் இயக்குனர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் இளைஞர்கள் என்பதாலும், அவர்களுடன் பணிபுரிந்தது எனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. ஒரு இளமையான டீம், சமூகத்தில் ஏற்பட்டு வரும் ஒரு பெரிய பிரச்சனையை கையில் எடுத்து ஒரு திரைப்படம் தயாரிப்பது என்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றும் கிஷோர் கூறியுள்ளார்.