யோகியிடம் பயிற்சி எடுத்து கொண்ட 'கபாலி' நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,September 09 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகர் கிஷோர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் மற்றொரு படமான 'யாத்ரீகன்' என்ற படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் கிஷோர் ஒரு யோகியாக நடித்துள்ளார்.

நேபாளம், பூட்டான், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் 'யாத்ரீகன்' படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மும்பை செல்லவுள்ளனர். அங்கு நடைபெறும் படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் ஜெயபால் கந்தசாமி கூறியபோது, 'யாத்ரீகன் படத்தின் ஹீரோ கேரக்டரான கிஷோர், தனது 10வது வயதில் இருந்து தற்போதைய 45வது வரை உலகின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து தனது வாழ்வை முழுமையடைய செய்ய முயற்சிக்கும் ஒரு கேரக்டர் ஆகும். அவர் பயணம் செய்யும் பல பகுதிகளில் ஒன்று நேபாளம். அங்கு அவர் ஒரு புத்த துறவிகள் வாழும் இல்லத்திற்கு செல்வது போன்ற ஒரு காட்சியும் படத்தில் உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் உள்பட பெரும்பாலான காட்சிகள் நேபாளம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கிஷோர், யோகி போல ஒரு போஸ் கொடுத்துள்ளார். இதற்காக அவர் ஒரு யோகா ஆசிரியரிடம் பயிற்சி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.