பள்ளியைத் தத்தெடுத்த வில்லன் நடிகர்… குவியும் வாழ்த்து!
- IndiaGlitz, [Monday,August 02 2021]
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சுதீப். இவர் தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ” திரைப்படத்தில் தேர்ந்த வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் எடுக்கப்பட்டு பின்னர் மலையாளம், கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருந்து.
கன்னட நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பைத் தவிர இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல அவதாரங்களைக் கொண்ட இவரின் சில திரைப்படங்கள் தேசிய விருதுகளைக் குவித்து இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சுதீப் தன்னுடைய சொந்த ஊரான ஷிவமோகா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் 133 வருடம் பழமையான பள்ளிக் கட்டிடம் ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிவரும் நடிகர் சுதீப் தற்போது பழமையான பள்ளிக் கட்டிடத்தை தத்தெடுத்து புதுப்பித்து வருகிறார்.
மேலும் இந்தப் பழமையான கட்டிடத்தில் நவீன வசதிகளையும் ஏற்படுத்த உள்ளாராம். இந்தத் தகவலை அடுத்து நடிகர் சுதீப்புக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சிலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.