23 பந்துகளில் 59 ரன்கள்.. பிரபல நடிகரின் அணியில் இருந்த கிறிஸ் கெய்ல் விளாசல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட திரை நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் அணியில் இருந்த கிறிஸ் கெய்ல் 23 பந்துகளில் 59 ரன்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வரும் கன்னட கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், பிரைன் லாரா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நடிகர் சுதீப் தலைமையிலான ஹெய்ஸாலா ஈகிள்ஸ் அணியும் சிவராஜ்குமார் தலைமையிலான உடையார் சார்ஜர் சாணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிவராஜ் குமார் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்த நிலையில் 106 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சுதீப் அணி களமிறங்கியது.
சுதீப் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 23 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியதை எடுத்து அந்த அணியை வெற்றி பெற்றது. இதனை அடுத்து கிறிஸ் கெய்லுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments