'கிருமி' நாயகனின் வித்தியாசமான தோற்றம்

  • IndiaGlitz, [Friday,October 23 2015]

சமீபத்தில் வெளியான 'கிருமி' படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் நாயகன் கதிர் நடித்து வரும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

'சிகை' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கதிர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

ஜெகதீஷ் சுப்பு இயக்கி வரும் இந்த படத்திற்கு 'கிருமி' படத்தை இயக்கி எடிட்டிங் செய்த அனுச்சரண், படத்தொகுப்பு செய்கிறார். டிவைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.