நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்வேன். கருணாஸ்

  • IndiaGlitz, [Sunday,July 03 2016]

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெற்ற கருணாஸ், திருவாடனை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யபட்டார். அதுமட்டுமின்றி தனுஷின் 'கொடி', சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தனுஷின் 'வடசென்னை' படத்திலும் நடித்து பிசியான நடிகராகவும் விளங்கி வருகிறார்
இந்நிலையில் எம்.எல்.ஏ பணிகளும், பட வாய்ப்புகளும் எதிர்காலத்தில் அதிகமானால் தனது நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்' என்று பேட்டி ஒன்றில் கருணாஸ் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பை ஏற்றதும் நிர்வாகிகள் அனைவரும் நலிந்த நடிகர்களின் பட்டியலை தேடி எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும், மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான பணிகளில் மூழ்கி இருந்ததாகவும் கூறிய அவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.