கமல்ஹாசனை சந்தித்தது ஏன்? நடிகர் கருணாஸ் விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சினிமா குறித்து இருவரும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ’கமல்ஹாசன் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உரிமையிலும், அவருடைய நூலகத்தில் வளர்ந்தவன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்ததாகவும், நான் சொன்ன சில அரசியல் கருத்துக்களை அவர் உன்னிப்பாக கேட்டதாகவும் கூறினார்

மேலும் அடுத்த கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்காக உரிமைகளை கேட்டு போராடி வரும் சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.,

More News

தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பாரா சூர்யா? காயத்ரி ரகுராம் கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிராக சமீபத்தில் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'மெஹரிஸ்ல்லா' பாடல் வைரல்!

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த

பிக் பேபியை பெற்றெடுத்த சாதனை தாய்… குவியும் வாழ்த்து!

அசாம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு 5.2 கிலோ கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரே மாநிலத்தில் 8,000 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று… பகீர் தகவல்!

கொரோனாவினால் ஏற்படும் இணை நோய்களில் ஒன்றான கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் இதுவரை 386 பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு  இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.