கமல்ஹாசனை சந்தித்தது ஏன்? நடிகர் கருணாஸ் விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சினிமா குறித்து இருவரும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ’கமல்ஹாசன் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உரிமையிலும், அவருடைய நூலகத்தில் வளர்ந்தவன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்ததாகவும், நான் சொன்ன சில அரசியல் கருத்துக்களை அவர் உன்னிப்பாக கேட்டதாகவும் கூறினார்

மேலும் அடுத்த கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்காக உரிமைகளை கேட்டு போராடி வரும் சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.,