ஸ்டாலின் முதல்வராக ஆதரவு கொடுத்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கூறி வரும் நிலையில் திரையுலகில் சிலரும் திமுகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவு ஒன்றில், 'நண்பர்களே! நான் திமுகவின் ஆதரவாளர் என நீங்கள் சந்தேகப்பட்டால் நீங்கள் சந்தேகப்பட்டது உண்மைதான். நான் திமுகவின் ஆதரவாளர் தான். மு.கஸ்டாலின் அவர்கள் அடுத்த முதல்வராக வர ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவராக உருவாகி வரும் உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பு கொண்ட கருணாகரன், திமுகவை ஆதரித்ததில் ஆச்சரியம் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். உதயநிதியுடன் கருணாகரன், 'நண்பேண்டா', 'கெத்து' மற்றும் 'நிமிர்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களில் நடிகர்களாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும்,

'வடசென்னை' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கடந்த சில நாட்களாக அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மூழ்கியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

'அட்டக்கத்தி' , 'மெட்ராஸ்' ஆகிய இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை: கமல்ஹாசன் வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.