close
Choose your channels

பிரபல தமிழ் நடிகர் தவறி விழுந்து காயம்: மருத்துவமனையில் அனுமதி

Thursday, July 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து காயம் அடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாரதிராஜாவின் ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக். தற்போது இளைய தலைமுறை நடிகர்களுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்ததாகவும், இதனை அடுத்து அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் கார்த்திக் அவர்களுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததாகவும் அதே இடத்தில் தான் தற்போதும் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துளனர்.

தற்போது அவர் சிகிச்சைக்குப் பின்னர் நடிகர் கார்த்திக் வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment