close
Choose your channels

விஜயகாந்துக்கு கார்த்திக் சொன்ன முக்கிய அறிவுரை

Thursday, March 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் திவீரமாக இருந்து வருகின்றன. தமிழக மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் விஜயகாந்த் எந்த கூட்டணியில் சேருவார் என்ற முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதில் கேப்டனின் பங்கு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்துடன் 'ஊமைவிழிகள்' என்ற படத்தில் நடித்தவரும் தேர்தல் காலத்தில் மட்டும் பார்ட் டைம் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருபவருமான நடிகர் கார்த்தி, விஜயகாந்துக்கு அறிவுரை ஒன்றை அளித்துள்ளார்.


சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயகாந்த் 'தான் கிங் ஆக இருக்க வேண்டுமா? அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? என்று தொண்டர்களிடம் கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு அகில இந்திய நாடாளும் கட்சி தலைவர் கார்த்திக் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.

விஜயகாந்த் கிங் ஆக இருப்பதைவிட கிங் மேக்கராக இருப்பதுதான் நல்லது என்றும் கிங்கை விட கிங் மேக்காருக்குத்தான் அதிக மரியாதையும் குறைவான ரிஸ்க்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய தலைவராக உருவாகியுள்ள விஜயகாந்த், கார்த்திக்கின் அறிவுரையை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment