நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Saturday,November 28 2015]
இயக்குனர் இமயம் இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கடந்த 90கள் முதல் முன்னணி நடிகராக விளங்கிய நவரச நாயகன் கார்த்திக் நேற்று இரவு திடீரென உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி தொண்டை வலியால் அவதிப்பட்டதாகவும் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிய வந்ததாகவும், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகர், அரசியல்வாதி என வலம் வரும் கார்த்திக் சமீபத்தில் வெளிவந்த தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் நடித்திருந்தார். அவர் விரைவில் 'அமரன் 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.