close
Choose your channels

தந்தை கார்த்திக் உடன் செம மோதல்.. கெளதம் கார்த்திக் வெளியிட்ட வீடியோ!

Thursday, September 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனும் தமிழ் திரையுலகின் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை கார்த்திக் உடன் மோதும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அதன்பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’வை ராஜா வை’ என்ற படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. இதன் பின்னர் ‘ஹர ஹர மகாதேவி’ ’இருட்டு-அறையில்-முரட்டு-குத்து’ ’தேவராட்டம்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் ’பத்து தல’ மற்றும் ’ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அதில் அவர் படங்கள் குறித்தும் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களையும் அப்போது பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை கார்த்திக் உடன் குத்துசண்டை விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில் கார்த்திக் நடித்த ’அமரன்’ திரைப்படத்தில் அவரே பாடிய ’வெத்தல போட்ட சோக்குல’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் கௌதம் கார்த்திக் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று என் தந்தையே எனக்கு சிறந்த நண்பராக இருப்பதுதான். என்னை எப்போதும் சிரிக்க வைத்து, எனக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் ஒரு அற்புதமான மனிதர்’ என்று பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment