முழுநேர அரசியல்வாதியாக மாறும் பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கமல்ஹாசன் , ரஜினிகாந்த் உள்பட ஒருசில கோலிவுட் திரையுலகினர் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு தேர்தல் வரும்போது திடீர் திடீரென அரசியலில் குதித்து அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டிருந்த நடிகர் கார்த்தி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாற முடிவு செய்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.,
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம். இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதிநேர அரசியலில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும்' என்று கார்த்திக் கூறியுள்ளார்.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout