சிம்பு பாடலை ஒருவரி கூட கேட்க முடியவில்லை : கார்த்திக்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் 'பீப் பாடல்' விவகாரம் பூதாகரமாகி அவர் எந்நேரமும் கைது செய்யப்ப்படலாம் என்றா நிலைக்கு போய்விட்டது. இந்த விவகாரத்தில் சிம்புவுக்கு ஆதரவாக பேச திரையுலகினர் யாருமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையுலகினர்களின் கண்டனத்துக்கு ஆளாகி வரும் சிம்புவை தற்போது பிரபல நடிகர் கார்த்திக்கும் கண்டனம் தெரித்துள்ளார்.
பீப் பாடல் குறித்து கருத்து கூறிய கார்த்திக், "நான் திரைத்துறையை நேசிப்பவன். 35 ஆண்டுகளாக அதில் இருந்து வருகிறேன். கோவில் போல அதை நேசிப்பவன். ஆனால், தமிழ் தற்போது தேய்ந்து வருகிறது. தரம் என்பதில் இருந்து ஒருபோதும் தாண்டக்கூடாது.
நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், கருத்து சுதந்திரத்தை திரைத்துறையினர் தவறாக பயன்படுத்தக்கூடாது. சிம்பு பாடிய பீப்` பாடலை நானும் கேட்டேன். பாடலில் பல்லவிக்கு பிறகு ஒரு வரியைக்கூட கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன். அவருடைய தந்தை டி.ராஜேந்தர் எனக்கு நண்பர்.
பாடலை தான் வெளியிடவில்லை என்று சிம்பு கூறினாலும், திரைத்துறையில் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் தோன்றவே கூடாது' இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments