சிம்பு பாடலை ஒருவரி கூட கேட்க முடியவில்லை : கார்த்திக்

  • IndiaGlitz, [Wednesday,December 23 2015]

சிம்புவின் 'பீப் பாடல்' விவகாரம் பூதாகரமாகி அவர் எந்நேரமும் கைது செய்யப்ப்படலாம் என்றா நிலைக்கு போய்விட்டது. இந்த விவகாரத்தில் சிம்புவுக்கு ஆதரவாக பேச திரையுலகினர் யாருமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையுலகினர்களின் கண்டனத்துக்கு ஆளாகி வரும் சிம்புவை தற்போது பிரபல நடிகர் கார்த்திக்கும் கண்டனம் தெரித்துள்ளார்.


பீப் பாடல் குறித்து கருத்து கூறிய கார்த்திக், "நான் திரைத்துறையை நேசிப்பவன். 35 ஆண்டுகளாக அதில் இருந்து வருகிறேன். கோவில் போல அதை நேசிப்பவன். ஆனால், தமிழ் தற்போது தேய்ந்து வருகிறது. தரம் என்பதில் இருந்து ஒருபோதும் தாண்டக்கூடாது.

நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், கருத்து சுதந்திரத்தை திரைத்துறையினர் தவறாக பயன்படுத்தக்கூடாது. சிம்பு பாடிய பீப்' பாடலை நானும் கேட்டேன். பாடலில் பல்லவிக்கு பிறகு ஒரு வரியைக்கூட கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன். அவருடைய தந்தை டி.ராஜேந்தர் எனக்கு நண்பர்.

பாடலை தான் வெளியிடவில்லை என்று சிம்பு கூறினாலும், திரைத்துறையில் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் தோன்றவே கூடாது' இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.

More News

ஏ.ஆர்.முருகதாஸின் நாயகியாகும் பிரபுதேவா நாயகி?

இளையதளபதி விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்...

ஜல்லிக்கட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ...

உதயநிதியின் 'கெத்து' டிராக் லிஸ்ட்

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கெத்து' படத்தின் பாடல்கள் வரும் 25...

பூலோகம் படத்துக்கு கிடைத்த பெரிய பரிசு

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படம் பலவித சோதனைகளை கடந்த வரும் 24ஆம் ...

சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம்...