சூப்பர் ஸ்டார் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த கொம்பன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்திக்கு கோலிவுட்டில் திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது 'மெட்ராஸ்' என்றுதான் சொல்ல வேண்டும். மெட்ராஸ் படத்தின் வெற்றி அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது என்று கூறினால் அது மிகையில்லை. 'மெட்ராஸ்' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வசூல் செய்து தயாரிப்பாளரையும், விநியோகிஸ்தர்களையும் திருப்தி செய்தது மட்டுமின்றி கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்று தந்து அவருக்கு மேலும் பெருமை சேர்த்தது.
இந்நிலையில் 'மெட்ராஸ்' இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்ததாக இயக்கவுள்ளது கருத்து கூறிய கார்த்தி, 'மெட்ராஸ் படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் காண்பித்த ரஞ்சித், கண்டிப்பாக தலைவருக்கும் வித்தியாசமான கேரக்டர் வைத்திருப்பார். சூப்பர் ஸ்டாரை இயக்க இன்றைய நிலையில் சரியான இயக்குனர் ரஞ்சித் என்பதில் சந்தேகம் இல்லை' என கூறியுள்ளார். முதன்முதலில் தான் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கவுள்ளதாக ரஞ்சித் என்னிடம் கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்' என்று கூறியுள்ளார்
ரஜினி-ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகை உள்பட நட்சத்திர தேர்வு நடைபெற்று வருவதாகவும், இம்மாத இறுதியில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ரஞ்சித்தின் சார்பில் கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout